9 மார்., 2011

லிபியா:வான்வழி போக்குவரத்துக்கு தடைவிதிக்க ஐ.நாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கோரிக்கை

ஜித்தா,மார்ச்.9:உள்நாட்டு கலவரம் மற்றும் இரத்தக் களரியாகும் லிபியாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு தடைவிதிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமெனவும் அதேவேளையில் வெளிநாட்டு தலையீடு கூடாது எனவும் O.I.C யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸான் ஓக்லு உறுதியாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: 'லிபியாவின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. கத்தாஃபியின் அரசு சர்வதேச சட்டங்களை காற்றில் பறத்தி தாம் ஒப்புவைத்த சர்வதேச ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் மீறுகிறது.

கடுமையான போராட்டம் லிபியாவில் நடக்கவிருக்கிறது. உள்நாட்டு கலவரத்தின் அடையாளங்கள் தெரிகின்றன. இந்த போரின் பலாபலன்கள் இஸ்லாமிய நாடுகளை பெரிதும் பாதிக்கும். அண்டை நாடுகளின் பாதுகாப்பு சிக்கலாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்பட கடுமையான் பொருளாதார நெருக்கடிகளுக்கு இது வழிவகுக்கும்.' என அவர் தெரிவித்தார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா:வான்வழி போக்குவரத்துக்கு தடைவிதிக்க ஐ.நாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கோரிக்கை"

கருத்துரையிடுக