திரிபோலி,மார்ச்.6:எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இடங்களை மீட்பதற்காக ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியின் ராணுவம் நடவடிக்கையை துவங்கியதைத் தொடர்ந்து மோதல் வலுப்பெற்று வருகிறது.
ராணுவ ஆயுதக்கிடங்கில் நடந்த குண்டுவெடிப்பிலும், துப்பாக்கிச் சூட்டிலும் 74 பேர் கொல்லப்பட்டனர். திரிபோலிக்கு அருகாமையிலுள்ள அஸ்ஸாவியாவில் வெற்றிப் பெற்றுள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கிழக்கு துறைமுகநகரமான ராஸ் லானூஃப் உள்பட ஏராளமான நகரங்களில் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச்சூடும் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாவியாவை மீட்பதற்கான போராட்டத்தில் 30 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.
பெங்காசிக்கு அடுத்துள்ள ஆயுதக்கிடங்கில் நடந்த குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. ராஸ் லானூஃபில் இரண்டு மோதல்களுக்கு பிறகு புரட்சியாளர்கள் கைப்பற்றினர். இங்கு எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, புரட்சியாளர்கள் ஏற்படுத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக கூடியது. கத்தாஃபி பதவியிலிருந்து விலகும்வரை பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். முன்னாள் சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீலின் தலைமையில் இந்த அரசு உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கத்தாஃபி அரசு ஐ.நாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ராணுவம் நடத்திய கூட்டுப் படுகொலையை கண்டித்த இரண்டு ஐ.நா பிரதிநிதிகளை லிபியா வெளியேற்றியிருந்தது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரை புதிய ஐ.நா பிரதிநிதியாக லிபியா நியமித்துள்ளது. லிபியாவில் ராணுவ நடவடிக்கை சரியானது தானா? என்பதை பரிசோதித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுடன் இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் பிராந்தியத்திற்கு வருகைத்தந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "லிபியாவில் கடுமையான போராட்டம் - 74 பேர் மரணம்"
கருத்துரையிடுக