8 மார்., 2011

கருணைக் கொலை: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மருத்துவர்கள் வரவேற்பு

மும்பை/புதுடெல்லி,மார்ச்.8:பாலியல் பலாத்காரத்தை தொடர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாக கிடக்கும் தாதி அருணா ஷான்பாக்கின் கருணைக் கொலை கோரும் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனை மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் வரவேற்றுள்ளனர்.

கருணைக்கொலைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது ஆபத்துக்களை உருவாக்குமென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருணைக் கொலையை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இந்தியா முதிர்ச்சியடையவில்லை என பெங்களூரில் மூத்த இதயநோய் சிகிட்சை வல்லுநர் தேவிபிரசாத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பரிபாலிக்க பொருளாதார சுமை எனக்கூறி கொலைச்செய்ய கருணைக் கொலை காரணமாகும். எனவே அதனை ஏற்றுக்கொள்ளவியலாது என ஷெட்டி தெரிவித்தார்.

கருணைக்கொலை துஷ்பிரயோகம் செய்யப்படும் என மும்பை மருத்துவமனையில் இதய சிகிட்சைப் பிரிவு தலைவர் பி.கே.கோயல் கருத்து தெரிவித்துள்ளார். கருணைக் கொலை என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாகும். நாம் அதனை கருணைக் கொலை என அழைத்தாலும், யாதொரு கருணையுமில்லாத கொலைதான் பின்னர் உருவாகும் என பி.கே.கோயல் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கருணைக் கொலை: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மருத்துவர்கள் வரவேற்பு"

கருத்துரையிடுக