10 மார்., 2011

மதச்சார்பற்​ற இந்தியாவே விளக்கம் தா? - சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக பாகிஸ்தானில் வெளியான விளம்பரம்

இஸ்லாமாபாத்,மார்ச்.10:தலைநகர் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்து 68 பேரை பலி வாங்கியவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரும் விளம்பரம் பாகிஸ்தானில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளிலும் திங்கள்கிழமை பிரசுரம் ஆனது.

"சம்ஜவு௦தா ரயிலில் நடந்த நாசவேலையால் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கைக் குழு" என்ற பெயரில் இந்த கால்பக்க விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. 'தி நியூஸ்' என்ற பத்திரிகை இந்த விளம்பரத்தைத் தன்னுடைய முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறது.

மும்பையில் நடந்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்புதான் என்று சர்வதேச அரங்குகளில் முழங்கி, பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தருகிறது பாகிஸ்தான் என்று பேசும் இந்தியாவே, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 42 பாகிஸ்தானியர்கள் இறப்புக்குக் காரணமான சங்கப் பரிவாரங்கள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?, குற்றவாளிகளைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? மதச்சார்பற்​ற இந்தியாவே விளக்கம் தா? என்று கேட்டிருக்கிறது அந்த அமைப்பு.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் யாரென்று தெரியாத நிலையில்கூட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்ததை இந்தியாவில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கூட கண்டித்து வருகின்றன.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாகக் ஹேமந்த் கர்காரே மூலம் கிடைத்த துப்பை அடுத்து ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து விசாரித்தபோதுதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று சி.பி.ஐ. போலீஸாருக்குத் தெரியவந்தது.

இதை அடுத்தே சுவாமி அசீமானந்தாவிடம் விசாரணை தீவிரம் அடைந்தது. இப்போது அவருக்கு உதவியவர்கள், அவருடன் தொடர்புள்ளவர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

ஆனால் நம்முடைய காவல்துறைப் புலன் விசாரணையும் நீதிமன்ற விசாரணையும் மிகுந்த காலதாமதத்துடன் நடப்பதால் வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளிகள் மூப்படைவதோ இறந்துவிடுவதோ நடந்துவிடுகிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள், குற்றவாளிகள் ஹிந்துக்கள் என்பதால் இந்தியப் புலனாய்வுத்துறை அவர்களைத் தப்புவிக்கும் நோக்கில் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகக் கருதுகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மதச்சார்பற்​ற இந்தியாவே விளக்கம் தா? - சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக பாகிஸ்தானில் வெளியான விளம்பரம்"

பெயரில்லா சொன்னது…

ஒவ்வரு இந்திய குடிமகனும் இந்திய மதசற்பற்றா (!!!!???) அரசிடம் கேட்கவேண்டிய கேள்வி .....

கருத்துரையிடுக