13 மார்., 2011

நேட்டோ தாக்குதலை நிறுத்த கர்ஸாயி கோரிக்கை

காபூல்,மார்ச்.13:ஆப்கானில் நேட்டோ படையினர் தனது தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாயி வலியுறுத்தியுள்ளார்.

முதல்முறையாக கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவை விமர்சித்துள்ளார் கர்ஸாயி. ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்கா மற்றும் கூட்டுப்படையினர் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஹமீத் கர்ஸாயியை கோபத்திற்குள்ளாக்கியது.

நேற்று முன்தினம் நேட்டோ நடத்திய விமானத் தாக்குதலில் கர்ஸாயியின் உறவினர் ஒரு கொல்லப்பட்டிருந்தார். நேட்டோ தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததுக் குறித்து நேட்டோ படைத்தலைவர் டேவிட் பெட்ரோஸ் மன்னிப்புக் கோரியதை கர்ஸாயி நிராகரித்திருந்தார்.

குணார் மாகாணத்தில் நேட்டோ நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற கர்ஸாயி நேட்டோ தனது பணியை நிறுத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"நாங்கள் பொறுமையுடையவர்கள். ஆனால், தற்பொழுது அதனை இழந்துவிட்டோம்" என கர்ஸாயி தெரிவித்துள்ளார்.

நேட்டோத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாகாணத்தின் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்கு ஆறுதல் கூற கர்ஸாயி சென்றார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நேட்டோ தாக்குதலை நிறுத்த கர்ஸாயி கோரிக்கை"

கருத்துரையிடுக