7 மார்., 2011

தாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் - பாப் பாடகி லேடி காகா எதிர்ப்பு

லண்டன்,மார்ச்.7:நவ நாகரீக உலகில் எதனைச் செய்யவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. எதையாவது புதியதாகச் செய்யவேண்டுமென்ற பேரில் வக்கிரங்களை அரங்கேற்றுவது மேற்கத்திய உலகிற்கு புதியதல்ல.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் நகரில் தாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டது ஒரு ரெஸ்ட்டாரெண்ட். இந்த ஐஸ்க்ரீம் விற்பனைக்கு அவர்கள் சூட்டிய பெயர் பேபி காகா என்பதாகும். தனது பெயரை உடனடியாக மாற்றாவிட்டால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாப் பாடகி லேடி காகாவின் வழக்கறிஞர்கள் ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாப் பாடகியின் பெயரில் ஐஸ்க்ரீம் தயாரித்து லாபம் சம்பாதிக்க முயலும் நடவடிக்கையை குற்றஞ்சாட்டியுள்ளனர் வழக்கறிஞர்கள்.

தாய்ப்பாலில் தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீமின் விற்பனை உடனடியாக விற்றுத் தீர்ந்தது. முதன் முதலாக இதற்கு ஒரு பெண்மணி வந்தார். பின்னர் ரெஸ்ட்டாரெண்டின் விளம்பரத்தைப் பார்த்து மேலும் 15 பெண்மணிகள் ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக ஐஸ்க்ரீம் விற்பனையை மாநகர கவுன்சில் அதிகாரிகள் தடைச் செய்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் - பாப் பாடகி லேடி காகா எதிர்ப்பு"

கருத்துரையிடுக