2 மார்., 2011

நஜ்முத்தீன் அர்பகானுக்கு கண்ணீருடன் விடை

இஸ்தான்புல்,மார்ச்.2:கடந்த பிப்.27-ஆம் தேதி மரணமடைந்த நவீன துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் சிற்பியும், முன்னாள் பிரதமருமான நஜ்முத்தீன் அர்பகானின் இறுதியாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அவருடைய உடல் ஜனாஸா (மரணிப்போருக்காக நடத்தப்படும் பிரார்த்தனை) தொழுகைக்குப் பிறகு இஸ்தான்புல்லில் மர்கஸ் அஃபந்தி மண்ணறை மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான், அதிபர் அப்துல்லாஹ் குல் உள்பட ஆளுங்கட்சி தலைவர்களும், பல்வேறு அரசியல் மற்றும் கலாச்சார பிரமுகர்களும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றனர்.

இதய அதிர்ச்சியின் மூலம் மரணமடைந்த நஜ்முத்தீன் அர்பகானின் உடலை இறுதியாக காண்பதற்காக் பெண்கள், சிறுவர்கள் உள்பட நாட்டின் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் அங்காராவில் குழுமியிருந்தனர்.

அங்காரா, இஸ்தான்புல் நகரங்கள் கண்ணீரை உதிர்த்துக் கொண்டு ராணுவ பயங்கரவாதம் மற்றும் மதசார்ப்பற்ற தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் களத்தில் நின்று உறுதியாக பணியாற்றிய அர்பகான் என்ற திடமான இஸ்லாமிய ஆளுமைக்கு இறுதி விடையை அளித்தன.

அர்பகானின் இறுதிச்சடங்கில் துனீசியாவின் அந்நஹ்தா இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி, எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான முஹம்மது மஹ்தி அகஃப், இந்தோனேசியாவின் ப்ராஸ்பரஸ் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் லுத்ஃபி ஹஸன் இஸ்ஹாக், இந்தியாவின் ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் கெ.எ.சித்தீக் உள்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "நஜ்முத்தீன் அர்பகானுக்கு கண்ணீருடன் விடை"

பெயரில்லா சொன்னது…

அல்லாஹ் அர்பகானின் பாவங்களை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இடமளிப்பானாக!அர்பகானின் இஸ்லாமிய அரசியல் வாழ்வு நம்மவர்களுக்கு பெரியதொரு படிப்பினையாகும்.

கருத்துரையிடுக