15 மார்., 2011

ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்

பெர்லின்,மார்ச்.15:ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை நீட்டிப்பதுக் குறித்த அரசுத் திட்டத்தை கண்டித்து ஸ்டூட்கர்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

45 கிலோமீட்டர் நீண்ட மனித சங்கிலியில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அணுசக்தி கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்பது ஜப்பானில் நிரூபணமாகியுள்ளது என போராட்டத்தில் கலந்துக் கொண்டோர் தெரிவித்தனர்.

அங்கலா மெர்கலின் அரசு அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை கடந்த ஆண்டு ஒருவருடத்திற்கு நீட்டியது. ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்புக் குறித்து அரசுக்கு பூரணமான தன்னம்பிக்கை உள்ளதாக மெர்கல் கூறுகிறார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்"

கருத்துரையிடுக