![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizMBs0N_7OU51yRn_0MDvIZxsy2K6jdAkEyOd-S7kZ3RV_83hr8YgqMpgiVCd0AE5bD6HWAQmip-JFbB_BGAqdmCaH0BzB8bzFE_BTbrUJW69vKUC6ivs_zPgH4i2F0pI_WgRgzWwoIHw/s400/yunus_jpeg_1221403cl-3.jpg)
ஷேக் ஹஸீனாவின் அரசுக்கும் யூனுஸுக்குமிடையே அண்மையில் கருத்து வேறுபாடுகள் உருவாகின. இதன் தொடர்ச்சிதான் அவருடைய பதவி பறிப்பு என கருதப்படுகிறது. பதவி நீக்கம் தொடர்பாக யூனுஸிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஓய்வு சட்டத்தை யூனுஸ் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ஆனால், மத்திய வங்கியின் கூற்றிற்கு கிராமீய வங்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக சட்ட ஆலோசனை தேடுவதாகவும், யூனுஸ் பதவியில் தொடருவார் எனவும் கிராமீய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1983-ஆம் ஆண்டு பங்களாதேஷ் கிராமீய வங்கி அரசாணையின்படி கிராமீய வங்கியின் மேலாண்மை இயக்குநர் மத்திய வங்கியின் முன்னுரிமை அங்கீகரித்துடன் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், யூனுஸின் நியமனத்தில் இது மீறப்பட்டதாகவும், அதனால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் மத்திய வங்கி அதிகாரி தெரிவிக்கிறார்.
பங்களாதேஷில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள பேராசிரியர் யூனுஸ் புதிய அரசியல் கட்சியைத் துவக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தது ஹஸீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து யூனுஸ் கிராமீய வங்கியை தனது சொத்தைப்போல் உபயோகிப்பதாகவும், மக்களை சுரண்டுவதாகவும் ஹஸீனா குற்றஞ்சாட்டியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பங்களாதேஷ்:கிராமீய வங்கியிலிருந்து பேராசிரியர் முஹம்மது யூனுஸ் நீக்கம்"
கருத்துரையிடுக