காபூல்,மார்ச்.3:ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் குழந்தைகளை அநியாயமாக குண்டுவீசி கொலைச் செய்துவிட்டு தவறாக நடந்துவிட்டது என நேட்டோ தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் குனார் மாகாணத்தில் ஹெலிகாப்டர் தாக்குதலில் 12 வயதுக்கு கீழான ஒன்பது ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்த அந்நிய ஆக்கிரமிப்பு படையின் தலைவன் ஜெனரல் டேவிட் பெட்ராஸ் தெரிவிக்கையில்,ராணுவத் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து மிகுந்த வருத்தம் அடைகிறோம்.
ராணுவத்துடனான தகவல் தொடர்பில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதாக தெரிவிக்கிறார்.
கடந்த மாதம் குனார் மாவட்டத்தில் நேட்டோவின் கொடூரமான ராணுவத் தாக்குதலில் பல சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.
2001-ஆம் ஆண்டுமுதல் அந்நிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளை கொலைச் செய்த நேட்டோவின் அக்கிரம நடவடிக்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குழந்தைகளைக் கொலைச் செய்த நேட்டோபடை மன்னிப்புக் கோருகிறது"
கருத்துரையிடுக