3 மார்., 2011

அஸிமானந்தாவை ராஜஸ்தானுக்கு வெளியே கொண்டுச் செல்லக்கூடாது - ஏ.டி.எஸ்

அஜ்மீர்,மார்ச்.3:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தா உள்பட நான்குபேரை இதர புலனாய்வு ஏஜன்சிகள் ராஜஸ்தானுக்கு வெளியே அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பாதுகாப்பு காரணம் காட்டி ஏ.டி.எஸ் இம்மனுவை அளித்துள்ளது. முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் ரேகா சவுதரியின் முன்னிலையில் ஏ.டி.எஸ் இம்மனுவை சமர்ப்பித்தது.

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அஸிமானந்தா, ஹர்ஷத் சோலங்கி, பாரத் மோகன் ரதேஷ்வர், முகேஷ் வஸானி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்களுக்கெதிராக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரியாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி உண்மை வெளிவந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தார். ஆகவே, இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இதர குற்றவாளிகளுக்கு ஹிந்துதுத்துவா பயங்கரவாதிகள் மூலம் ஆபத்து ஏற்படலாம் என கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஸிமானந்தாவை ராஜஸ்தானுக்கு வெளியே கொண்டுச் செல்லக்கூடாது - ஏ.டி.எஸ்"

கருத்துரையிடுக