7 மார்., 2011

லிபிய போர்விமானங்கள் எண்ணெய் நகரங்களில் குண்டுவீசித் தாக்குதல்

திரிபோலி,மார்ச்:எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீட்பதற்காக கத்தாஃபியின் படையினர் எண்ணெய் வளமிக்க நகரங்களில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர்.

ராஸ் லானூஃபில் பல்வேறு பகுதிகளில் போர்விமானங்கள் குண்டுகளை வீசியது. எதிர்ப்பாளர்களின் வலுவானத் தாக்குதலைத் தொடர்ந்து சில பகுதிகளிலிருந்து ராணுவம் பின்வாங்கியது. இங்கு 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

எதிர்ப்பாளர்கள் கைப்பற்றிய பென் ஜவாதில் பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் உள்பட 11 பேருக்கு கடுமையான காயமேற்பட்டுள்ளது. ஸிர்த்தை நோக்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களின் வாகனங்களை தாக்க கத்தாஃபி உத்தரவிட்டுள்ளார்.

ராஸ் லானுஃப், மிஸ்ரத்தா, தப்ரூக் ஆகிய நகரங்களை மீட்டதாக ராணுவமும், இல்லையென எதிர்ப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

எதிர்ப்பாளர்கள் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்ப்பாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தைக்கு வந்த தூதரக பிரதிநிதியுடன் பயணித்த எட்டு பிரிட்டீஷ் ராணுவத்தினரை எதிர்ப்பாளர்கள் பிடித்தனர்.

எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக சண்டே டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. லிபியாவில் நடக்கும் எதிர்ப்பு போராட்டத்தைக் குறித்து ஐ.நா அல்லது ஆப்பிரிக்க யூனியன் விசாரணை நடத்தவேண்டுமென கத்தாஃபி வலியுறுத்தியுள்ளார்.

லிபியாவிலிருந்து தினமும் 1000.பேர் வருவதாக துனீஷியாவில் ரெட்க்ரஸண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லையைக் கடந்து வருபவர்களுக்கு முகாம்கள் தயார்படுத்தியிருப்பதாக அல்ஜீரியாவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லிபியா நாட்டவர்கள் மற்றும் அந்நாட்டின் தொழிலாளர்களின் நிலைமைக் குறித்து ஐ.நாவின் ஹைக்கமிஷன் கவலைத் தெரிவித்துள்ளது.

தீவிரமான போராட்டம் நடைபெறும் லிபியாவின் வீதிகளிலிருந்து தப்புவதற்கு வழித்தெரியாமல் பெரும்பாலானோர் சிக்கியுள்ளதாக ஐ.நா ஹைக்கமிஷனர் மெலிஸா ஃப்ளமிங் தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபிய போர்விமானங்கள் எண்ணெய் நகரங்களில் குண்டுவீசித் தாக்குதல்"

கருத்துரையிடுக