6 மார்., 2011

நாசா அனுப்பிய செயற்கைகோள் கடலில் விழுந்தது

புளோரிடா,மார்ச்.6:அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன.

பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை.

இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை எட்ட முடியவில்லை. ராக்கெட்டும், செயற்கைக்கோளும் பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நாசா அனுப்பிய செயற்கைகோள் கடலில் விழுந்தது"

கருத்துரையிடுக