6 மார்., 2011

'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்பட சிறுமி ரூபினாவின் வீடு தீ விபத்தில் சேதம்

மும்பை,மார்ச்.6:ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்தில் நடித்தன் மூலம் புகழ்பெற்ற ரூபினா அலி என்னும் சிறுமியின் வீடு மும்பை தீ விபத்தில் சேதமடைந்தது. மும்பை புறநகரான பந்த்ராவில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2000 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதில், ரூபினா அலியின் வீடும் சேதமடைந்தது. மேலும், அவர் பெற்ற திரைப்பட விருதுகளும் தீயில் கருகிவிட்டது.

இந்த தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையி்ல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்பட சிறுமி ரூபினாவின் வீடு தீ விபத்தில் சேதம்"

கருத்துரையிடுக