8 மார்., 2011

லிபியாவுக்கு செல்லும் ஐ.நாவின் சிறப்பு தூதர்

ஐ.நா,மார்ச்.8:அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ராணுவத்தினருக்கு கடுமையான மோதல் நடந்துவரும் லிபியாவுக்கு சிறப்பு தூதர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய ஐ.நா தீர்மானித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனும் லிபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவும் தொலைபேசியில் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் அல் காதிபை லிபியாவுக்கான சிறப்புத் தூதராக பான் கீ மூன் நியமித்துள்ளார்.

லிபியா மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை பரிசீலிக்க தயாராகவேண்டுமென பான் கீ மூன் குஸாவிடம் வலியுறுத்தினார். நாட்டில் குடிமக்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பை லிபியா உயர்த்திப் பிடிக்கவேண்டும். அமைதியாகவும், அந்தஸ்துடனும் வாழ்வதற்கு மக்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் அல் காதிப் நியூயார் செல்வார் என தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

"பிரசுரிக்கப்படும் செய்திகள் தவறாகும். லிபியாவுக்கு ஆப்பிரிக்க யூனியன் அனுப்பும் விசாரணைக்குழு இதனை நிரூபிக்கும்" என முஅம்மர் கத்தாஃபி தெரிவிக்கிறார்.

"நாடு அமைதியாக உள்ளது. சிறிய சம்பவங்கள் ஊதிப் பெருக்கப்படுகிறது.தாக்குதல்களை நிறுத்தி எதிர்தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும்." இவ்வாறு பிரதமருடன் தொலைக்காட்சியில் தோன்றி உரைநிகழ்த்திய கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பாளர்களிடமிருந்து பின் ஜவாத் நகரத்தை கைப்பற்றிய ராணுவம் ராஸ் லானூஃபை நோக்கி நீங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாவியாவில் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. திரிபோலிக்கும், கத்தாஃபியின்
பிறந்த ஊரான ஸிர்த்துக்குமிடையே மிஸரத்தாவில் இரு பிரிவினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ப்ரிகாவில் மருத்துவமனையில் 42 பேர் காயமேற்பட்டு சிகிட்சைப் பெற்று வருகின்றனர். எட்டுபேர் இங்கு நேற்று முன்தினம் கொல்லப்பட்டிருந்தனர். எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்களை உபயோகிக்க தெரியாததால் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மூலமாக காயமேற்பட்ட சம்பவங்களும் வெளியாகியுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியாவுக்கு செல்லும் ஐ.நாவின் சிறப்பு தூதர்"

கருத்துரையிடுக