12 மார்., 2011

பினாயக் சென்:சட்டீஷ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,மார்ச்.12:மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் எனக்குற்றஞ்சாட்டி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக் சென்னின் ஜாமீன் மனுவில் விளக்கமளிக்கக்கோரி சட்டீஸ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதிகளான ஹர்ஜித் சிங் பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நான்கு வாரங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை மீண்டும் பரிசீலிக்கும். முன்னர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்திருந்தது. ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து சென்னின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

பினாயக் சென்னின் மாவோயிஸ்ட் தொடர்பை நிரூபிக்க ஒரு ஆதாரமும் அரசினால் ஆஜராக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பினாயக் சென்:சட்டீஷ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்"

கருத்துரையிடுக