12 மார்., 2011

போராட்டம் தீவிரம்: ராணுவம் இரண்டு நகரங்களை மீட்டது

திரிபோலி,மார்ச்:மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுவரும் லிபியாவில் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் ஆதரவாளர்களான ராணுவத்தினர் முக்கியமான இரண்டு நகரங்களை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்றினர்.

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தலைநகரான திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ள ஸாவியா நகரத்தின் கட்டுப்பாட்டை ராணுவம் மீட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபில் ராணுவம் நுழைந்தவுடன் எதிர்ப்பாளர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படகுகள் மற்றும் டாங்குகள் மூலம் நகரத்தில் ராணுவம் தாக்குதல் நடத்தியது. எதிர்ப்பாளர்களின் முக்கிய மையமான பெங்காசியை நோக்கி ராணுவம் புறப்பட்டுள்ளதாக கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதேவேளையில், எதிர்ப்பாளர்களின் அரசை அங்கீகரித்த பிரான்சு நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு இதரநாடுகளும் அங்கீகரிக்க வேண்டுமென எதிர்ப்பாளர்களின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரப்பூர்வ ராணுவத்தினர் எங்களை விட வலுவாக உள்ளனர். ஆகவே எங்களுக்கு உதவ இதர நாடுகள் தயாராக வேண்டுமென அப்துல் ஜலீல் வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண மக்களுக்கெதிரான தாக்குதலை கத்தாஃபியின் அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், லிபியாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கையைக்குறித்து கூடுதல் ஆலோசனை தேவைப்படுகிறது என காமரூன் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்படும் பகுதிகளைக் குறித்து அறிவிக்க நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் நேற்று முன்தினம் கூடியபொழுதும் தீர்மானம் எடுக்காமல் பிரிந்தனர். எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவோம் என ஸைஃபுல் இஸ்லாம் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என ஆப்பிரிக்க யூனியனும் அறிவித்துள்ளது.

இதற்கிடையே எதிர்ப்பாளர்கள் மீது கத்தாஃபியின் ராணுவம் வெற்றிப்பெறும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இண்டலிஜன்ஸ் ஆலோசகர் ஜெயிம்ஸ் க்ளாப்பர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போராட்டம் தீவிரம்: ராணுவம் இரண்டு நகரங்களை மீட்டது"

கருத்துரையிடுக