1 மார்., 2011

அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் மூலம் சர்வாதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை கொல்கின்றனர் - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,மார்ச்.1:இன்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளை ஆளும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் மூலம் தங்களது சொந்தநாட்டு மக்களை கொன்று வருகின்றனர் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"யார் சர்வாதிகாரத்தை இவ்வுலகில் தோற்றுவித்தார்களோ அவர்கள் இன்று, ஜனநாயகத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடமிருந்து வாங்கிய சிறியது முதல் பெரிய ஆயுதங்களைக் கொண்டு தங்களது நாட்டு மக்களை கொன்று வருகின்றார்கள் இந்த சர்வாதிகாரிகள்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 30-40 ஆண்டுகளாக நடந்துவரும் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும்தான் காரணம்." என அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹ்மான்பரஸ்த் கூறுகையில், டெஹ்ரான் லிபியாவின் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறது. லிபியாவுக்கு மனிதநேய உதவிகளை மேற்கொள்ள ஈரான் தயாராகவே உள்ளது என தெரிவித்தார்.

செய்தி:ப்ரஸ் டி.வி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் மூலம் சர்வாதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை கொல்கின்றனர் - அஹ்மத் நஜாத்"

கருத்துரையிடுக