1 மார்., 2011

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்குமாம்? - பொன்.ராதாகிருஷ்ணன்

பெங்களூர்,மார்ச்.1:இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தமிழக, கர்நாடக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடந்தது. அதில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் சொந்த பலத்துடனே போட்டியிட விரும்புகிறோம். அவ்வாறு செய்தால், தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் நங்கள் வெற்றி பெறுவோம். இதுவரை நாங்கள் கூட்டணி பற்றி யாருடனும் பேசவில்லை.

திமுகவை தோற்கடிப்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக மற்ற கட்சிகள் ஒன்றாகச் சேர வேண்டும். அவ்வாறு நடந்தால், கூட்டணி குறித்து யோசிக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.

நாங்கள் 3வது அணி அமைப்பது குறித்து யோசிக்கவில்லை. இந்த மாதம் 2வது வாரத்தில் நான் தேர்தல் சுற்றுப்பயணத்தை துவங்குகிறேன்.

தமிழகத்தில் தேர்தல்-பணியாற்ற கர்நாடக பாஜகவினருக்கு அழைப்பு??:

பல ஆண்டுகளுக்கு முன் பாஜகவை வடமாநில கட்சி என்பார்கள். ஆனால் இன்று தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது என்பது பெரிய சாதனையாகும். இந்த வெற்றி தீப விளக்கு தமிழகத்துக்கும் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் கல்வியில் நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சியின் நிலை தாழ்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும். தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்காக நீங்கள் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

பெங்களூரில் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது முதல்வர் எடியூரப்பா தான். இது காங்கிரஸ் ஆட்சியில் நடக்கவில்லை. திருவள்ளுவர் சிலைக்கு கன்னட மக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு நாம் எதிரிகள் கிடையாது. நாமெல்லாம் இந்தியர்கள். இந்த முறை தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் காலடி எடுதக்து வைக்க வேண்டும் என்றார்.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 கருத்துகள்: on "இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்குமாம்? - பொன்.ராதாகிருஷ்ணன்"

பெயரில்லா சொன்னது…

அடே௦ய்! உங்கள் கனவு கானல் நீராகும். விட்டுருவோமா? இன்னும் 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கப்படுவீர்கள்.

TAMIZHAN சொன்னது…

silai thirappu miga priya sadnai.
pondaga vengaya nayudu kuda serntha vengayangala

shaheed சொன்னது…

காமெடி பீஸ்!!!!

பெயரில்லா சொன்னது…

"நாங்கள் கூட்டணி பற்றி யாருடனும் பேசவில்லை".யாரவது கூப்பிட்டாதானே பேசுவதற்கு , கோபாலபுரத்து முன் வாசலும் போயஸ் கார்டன் பின் வாசலும் மூடியாச்சு, திக்கு வாய் கார்த்திக்கும் பாடி பில்டர் சரத் குமாரும் சத்தமில்லாமல் சரணடைந்தாச்சு.
நாமீ

பெயரில்லா சொன்னது…

"தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் நங்கள் வெற்றி பெறுவோம்" முதலில் இரட்டை இலக்கத்தில் டெபாசிட் கிடைக்குதான்னு பாருங்க . அதுசரி சமீபத்தில் நடந்த பிஜேபி பிரஸ் மீட்டில் உங்க முன்னால் தலைவர் கிருபாநிதி தி மு க விற்கு தாவி விட்டதாக அறிவித்தாரே. இதுதான் உங்கள் சொந்த பலமோ!!!!! கிச்சு கிச்சு மூட்டாதிங்க திரு பெண் ராதாகிருஷ்ணன்.
நாமீ

கருத்துரையிடுக