பாக்தாத்,மார்ச்.5:அரசு விதித்துள்ள தடையை மீறி ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாதின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தியதால் மக்கள் பல மணிநேரங்கள் நடந்து வந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
ஈராக்கின் நஜஃபிலும், துறைமுக நகரமான பஸ்ராவிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பஸ்ரா மாகாண தலைமையகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கடந்தவாரம் மாகாண ஆளுநர் ராஜினாமாச் செய்திருந்தார். மாகாண கவுன்சிலை கலைக்க வேண்டுமெனவும், தேவையான சேவைகளை அளிக்கவேண்டுமெனக் கோரி நேற்று மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் 17 நகரங்களில் போராட்டம் நடைபெற்றன. போலீசுடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டு 130 பேருக்கு காயமேற்பட்டது. இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித்திரியும் பொழுது நாங்கள் அடங்கியிருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பஹ்ஜத் தாலிப் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்கில் பெரும் மக்கள் எழுச்சி"
கருத்துரையிடுக