5 மார்., 2011

திரிபோலியில் பிரம்மாண்டமான போராட்டம்

திரிபோலி,மார்ச்.5:நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் தொடரும் லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக தலைநகரான திரிபோலியில் நேற்று பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றது. ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் வீதிகளில் இறங்கிய மக்கள் கலைந்து செல்வதற்காக ராணுவம் கண்ணீர் குண்டுகளை வீசியது. சிதறிய மக்கள் கூட்டம் லிபியாவின் கொடியை எரித்தது. துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டம் நடைபெறும் என முன்பே தெரிந்த கத்தாஃபி ரகசிய போலீசாரை நிறுத்தியிருந்தார்.

இதற்கிடையே, கத்தாஃபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 பேருக்கு இண்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச போலீஸான இண்டர்போலில் அங்கம் வகிக்கும் 188 நாடுகளில் இந்த நோட்டீஸ் அமுலில் வந்துள்ளது. இதனால் கத்தாஃபி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு வெளிநாட்டிற்கு பயணிக்க இயலாது.

இதற்கிடையே, கிழக்கு பகுதியில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் கடுமையான விமானத் தாக்குதலை ராணுவம் நடத்தியுள்ளது. அஜ்தாபியில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவீச்சு தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டது. சேதவிபரங்கள் வெளியாகவில்லை.

கிழக்கு எண்ணெய் துறைமுகமான ராஸ் லானுஃபில் ராணுவமும், புரட்சியாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். அஸ்ஸாவியாவிற்கு அடுத்துள்ள பகுதி தங்களின் கட்டுப்பாட்டிலுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. பெங்காசிக்கு அடுத்துள்ள உகய்லாவிலும் கடுமையான போராட்டம் நடைபெறுகிறது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களை திரிபோலியில் ஹோட்டலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே,ப்ரிகாவில் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் லிபியாவின் எண்ணெய் நகரம் கருதப்படும் பகுதியில் தீவிரமானதாக்குதல் நடைபெற்றது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

கத்தாஃபி நாட்டை விட்டு வெளியேறாமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் நேசனல் கவுன்சில் அறிவித்துள்ளது. லிபியாவில் பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு இல்லாமல் பேச்சுவார்த்தை சாத்தியம் இல்லை. கத்தாஃபி லிபியாவில் இருக்கும்வரை கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நேசனல் கவுன்சில் உறுப்பினர் அஹ்மத் ஜப்ரீல் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "திரிபோலியில் பிரம்மாண்டமான போராட்டம்"

கருத்துரையிடுக