ஸன்ஆ,மார்ச்.5:வடக்கு யெமனில் அம்ரான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது யெமன் ராணுவம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேருக்கு காயமேற்பட்டுள்ளது.
தலைநகரான ஸன்ஆவிலிருந்து 170.கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸெம்லாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1978-ஆம் ஆண்டுமுதல் பதவியில் தொடரும் யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக போராட்டங்கள் கடந்த வாரங்களில் தீவிரமாக நடைபெற்றிருந்தன.
நேற்று எதிர்ப்பு தினத்தை கடைபிடித்த யெமன் நாட்டு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட யெமன் ராணுவம்"
கருத்துரையிடுக