1 மார்., 2011

லிபியா:மேற்கு நகரங்களும் புரட்சியாளர்களின் வசம்

திரிபோலி,மார்ச்:லிபியாவின் கிழக்கு நகரங்களை கைப்பற்றிய லிபிய புரட்சியாளர்கள் அந்நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரங்களையும் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

தலைநகரான திரிபோலியை நோக்கி புரட்சியாளர்கள் நகர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாலூத்திலிருந்து கத்தாஃபி தப்பிச் சென்றதாக கருதப்படுகிறது.

கிழக்கு நகரமான பெங்காசியை மையமாகக் கொண்டு புதிய அரசை உருவாக்கியுள்ள புரட்சியாளர்கள் திரிபோலியை கைப்பற்ற ராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.

லிபியாவின் பலபகுதிகளிலும் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மீது கத்தாஃபியின் ஆதரவாளர்கள் குண்டை வீசுவதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் வடமேற்கு நகரமான மிஸ்ரத்தில் ராணுவத்தின் போர் விமானம் தகர்ந்து வீழ்ந்தது.

புரட்சியாளர்கள் பெருமளவில் முன்னேறியுள்ள நகரமாகும் இது. இவர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. திரிபோலிக்கு 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸாவியா நகரம் நேற்றும் முன்தினம் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

லிபியாவில் நடக்கும் போர் குற்றத்தைக் குறித்து ஆரம்ப விசாரணை நடத்தப்படும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ப்ராஸ்க்யூட்டர் லூயிஸ் மொரேனோ ஒகாபோ அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கிடையில் லிபியாவிலிருந்து ஏறத்தாழ ஒருலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியதாக ஐ.நாவின் அகதிகளுக்கான ஹைக்கமிஷனர் தெரிவித்துள்ளார்.

துனீஷியா, எகிப்து ஆகிய நாடுகளின் வழியாக பெரும்பாலான வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்திற்கு வருகைத்தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் இதர நாடுகளைச் சார்ந்த அமைச்சர்களுடன் லிபியா விவகாரம் தொடர்பாக விவாதித்தார்.

கனடா, பிரிட்ன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கத்தாஃபி பதவி விலக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கத்தாஃபியின் சொத்துக்களை முடக்க வேண்டுமென ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். லிபியாவுக்கு மருந்துகளுடன் இரண்டு விமானங்கள் அனுப்பப்படும் என பிரான்சு அறிவித்துள்ளது. கத்தாஃபி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்க பிரிட்டன் தீர்மானித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா:மேற்கு நகரங்களும் புரட்சியாளர்களின் வசம்"

கருத்துரையிடுக