6 மார்., 2011

எகிப்தில் போலீசாருடன் மோதிய அரசு எதிர்ப்பாளர்கள்

கெய்ரோ,மார்ச்.6:எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும், போலீசாரும் கடுமையான மோதலில் ஈடுபட்டனர்.

ஆயிரத்திற்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் போலீஸ் தலைமையகத்தை தாக்கியதைத் தொடர்ந்து மோதல் உருவானது.

கட்டிடத்திற்குள் சிக்கிய போலீஸார் மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்கினர். இதில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

போலீஸ் தலைமையகத்தில் பாதுகாத்து வைத்திருந்த அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் அழித்ததாக உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அவசரச் சட்டங்களை வாபஸ்பெறவும், போலீஸிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை நீக்கக் கோரியும் தன்னார்வத் தொண்டர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முபாரக்கின் ஆட்சியின்போது ஏராளமானோரை கைது செய்து சித்திரவதைக்கு ஆளாக்கி கொலைச்செய்த போலீஸ்காரர்கள்தாம் தற்பொழுதும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்தில் போலீசாருடன் மோதிய அரசு எதிர்ப்பாளர்கள்"

கருத்துரையிடுக