6 மார்., 2011

இரண்டு வாரத்திற்குள் முஷாரஃபை ஆஜர்படுத்த பாக்.நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்,மார்ச்.6:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை இரண்டு வாரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டுமென ஃபெடரல் இன்வெஸ்டிகேசன் ஏஜன்சி வழக்கறிஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலைத் தொடர்பான வழக்கில் முஷாரஃபிற்கு எதிராக முன்னர் 2 முறை கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. முஷாரஃபை ஆஜர்படுத்த ஒரு மாத கால அவகாசம் தேவை என்ற அரசுதரப்பின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

லண்டனில் வசித்துவரும் முஷாரஃபிற்கு தூதரகம் வழியாக வாரண்ட் அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இரண்டு வாரத்திற்குள் முஷாரஃபை ஆஜர்படுத்த பாக்.நீதிமன்றம் உத்தரவு"

கருத்துரையிடுக