ஐ.நா,மார்ச்.6:வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி பாலகர்களை கொலைச்செய்த கொலை வெறிப்பிடித்த அமெரிக்க தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படைக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் வெளிநாட்டு ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல் குறித்து மீளாய்வுச் செய்யவேண்டுமென குழந்தைகள் மற்றும் ஆயுத கிளர்ச்சிக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டது தீவிரமான பிரச்சனையாகும். இதனை அங்கீகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
குணார் மாகாணத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது நேட்டோ நடத்திய அக்கிரமத் தாக்குதலில் 9 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அந்நிய ஆக்கிரமிப்பு படைக்கெதிராக கடுமையான எதிர்ப்பை வலுப்படுத்தியுள்ளது. குழந்தைகள் கொல்லப்பட்டதில் அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரத்திற்கிடையே கிழக்கு ஆப்கானிஸ்தானில் கொலைக்கார நேட்டோ படையினர் நடத்திய நான்கு தாக்குதல்களில் எட்டுபேர் கொல்லப்பட்டனர். சிவிலியன்கள் கொல்லப்படுவது சமாதானத்திற்கான முயற்சிகளை பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குழந்தைகளை குண்டுவீசி கொலைச்செய்த நேட்டாவுக்கு ஐ.நா கண்டனம்"
கருத்துரையிடுக