6 மார்., 2011

கஷ்மீர்:கடந்த ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 - அரசு அறிக்கை

ஜம்மு,மார்ச்.6:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த எழுச்சி போராட்ட வேளையில் 104 சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதில் 92 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமேற்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் இதர 12 பேரும் கொல்லப்பட்டதாக கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையோ அல்லது ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடோ வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:கடந்த ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 - அரசு அறிக்கை"

கருத்துரையிடுக