புதுடெல்லி,மார்ச்.6:சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை வருகிற மார்ச்-11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலிக்கிறது.
மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பினாய்க் சென்னிற்காக வாதாடுகிறார்.
நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு எனக் குற்றஞ்சாட்டி மனித உரிமை ஆர்வலரான பினாய்க் சென்னிற்கு சட்டீஷ்கர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பினாயக் சென் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி சட்டீஷ்கர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அம்மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
நக்ஸலைட்டுகளுடன் பினாயக் சென்னிற்கான தொடர்புக் குறித்து அரசுத் தரப்பால் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்க இயலவில்லை என சட்டீஷ்கர் உயர்நீதிமன்றத்தில் அளித்த ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை உச்சநீதிமன்றத்திலும் சென்னின் வழக்கறிஞர் முன்வைப்பார் எனத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட டாக்டர் சென் விசாரணையில்லாமலேயே இரண்டு ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்துள்ளார்.உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை அவருக்கு ஜாமீன் அனுமதிக்க வேண்டும். சென்னின் மீதான வழக்கு அரசியல் தூண்டுதலாகும். என ராம்ஜெத்மலானி சுட்டிக்காட்டுவார்.
டாக்டர் பினாயக் சென்னிற்கு சட்டீஷ்கர் விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள்தண்டனைக் குறித்து உலகம் முழுவதுமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவர்களின் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
உயர்நீதிமன்றத்தில் சென்னின் மீதான ஜாமீன் மனு விசாரணையின் போது ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிக்குழு கண்காணிப்பாளராக வந்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "டாக்டர் சென்னின் ஜாமீன் மனு மீது மார்ச் 11-ம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலனை"
கருத்துரையிடுக