12 மார்., 2011

கத்தாஃபி பதவி விலக ஐரோப்பிய யூனியன் கோரிக்கை

பிரஸ்ஸல்ஸ்,மார்ச்.12:மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபி பதவி விலக வேண்டுமென ஐரோப்பிய யூனியன் அரசியல் தலைவர்களின் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

நேற்று பிரஸ்ஸல்ஸில் நடந்த அவசர உச்சி மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்கள் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

லிபியாவின் பிரச்சனைக்கு காரணம் கத்தாஃபி ஆவார். எனவே அவர் அதிகாரத்திலிருந்து விலகவேண்டும் என உச்சிமாநாட்டிற்கு வருகைத்தந்த ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஜோஸ் மானுவல்
பரோஸா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேசச் சட்டங்களை கடைப்பிடித்து அந்த லட்சியத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என அவர் தெரிவித்தார்.


லிபியாவில் எதிர்ப்பாளர்களின் அரசிற்கு தங்களைப்போல் இதர நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென பிரான்சு விடுத்த கோரிக்கைக்கு போதுமான ஆதரவு உச்சிமாநாட்டில் கிடைக்கவில்லை.

அதேவேளையில், லிபியாவுக்கெதிராக என்ன நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற காரியத்தில் உச்சிமாநாட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.

பெங்காசியை மையமாகக்கொண்டு செயல்படும் லிபியா எதிர்ப்பாளர்களின் அரசை ஆதரித்த பிரான்சின் நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் உறுப்புநாடுகள் விமர்சித்துள்ளன.

கடந்த மாதம் செயல்படத் துவங்கிய லிபியன் நேசனல்
கவுன்சிலிற்கு அங்கீகாரம் அளிக்கவேண்டுமென பிரான்சும், இங்கிலாந்தும் உச்சிமாநாட்டில் கோரிக்கை வைத்தன. ஆனால், லிபியாவின் அண்டை நாடுகளுடனும், அரபு லீக்குடனும் விவாதித்த பிறகே இக்காரியத்தில் முடிவெடுக்க வேண்டுமென ஜெர்மனி கருத்துத் தெரிவித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தாஃபி பதவி விலக ஐரோப்பிய யூனியன் கோரிக்கை"

கருத்துரையிடுக