1 மார்., 2011

கத்தாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது கனடா ஆயுதத்தடை: சொத்துக்களும் முடக்கம்

மார்ச்.1:லிபியாவில் கத்தாஃபி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச சமூகம் கண்டித்ததுடன் பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது விதித்துள்ள தடையை தொடர்ந்து கனடாவும் லிபியா மீது தடைவிதித்துள்ளது. இந்த தடையால் ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்படுவதுடன் சொத்து முடக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவின் இந்த தடை அறிவிப்பை பிரதமர் ஹார்ப்பர் வெளியிட்டார். இந்த அறிவிப்பின் போது லிபிய அதிபர் கத்தாஃபி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஹார்ப்பர் தொலைக்காட்சியில் விடுத்த அறிக்கையில், "லிபியாவில் ரத்தம் சிந்தும் நடவடிக்கையை நிறுத்துவதுடன் கத்தாஃபி ஆட்சியை விட்டு விலக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் லிபியா மீது பொருளாதார தடை விதித்தது. உறுப்பினர் நாடுகளும் கத்தாஃபி, அவரது 4 மகன்கள் மற்றும் மகளின் சொத்துகளை முடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

கத்தாஃபி குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ளவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. கடாபியின் முக்கிய உதவியாளர்கள் சொத்துகளை முடக்கவும் முடிவு செய்யப்பட்டது. லிபிய அரசுக்கு இடையேயான நிதித்தடை மற்றும் லிபியா சென்ட்ரல் வங்கி தடை ஆகியவற்றை கனடா அறிவித்தள்ளது.

இந்த தடைகள் மூலம் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவியை பெற முடியாது. 192 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐ.நா சபை, லிபியாவை உலக மனித உரிமை அமைப்பில் இருந்து நீக்கவும் முடிவு எடுத்துள்ளது. தமது சொந்த நாட்டு மக்களுக்கே கத்தாஃபி துரோகம் செய்துள்ளார் என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது கனடா ஆயுதத்தடை: சொத்துக்களும் முடக்கம்"

கருத்துரையிடுக