1 மார்., 2011

யுஏஇ:அல்-அய்னில் விமான விபத்த - நான்கு பேர் மரணம்

அபுதாபி,மார்ச்.1:யு.ஏ.இயில் அல் அய்ன் நகரத்தில் சிறிய விமானம் ஒன்று தகர்ந்து வீழ்ந்ததில் 4 அமெரிக்கர்கள் மரணமடைந்தனர்.

அல் அய்ன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ரியாத்திற்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யு.ஏ.இ நேரம் 08.07க்கு இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. எட்டு இருக்கைகளைக் கொண்ட இவ்விமானம் அமெரிக்காவின் டெக்ஸாஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ட்ரிப்பிள் எஸ் ஏவியேசனுக்கு சொந்தமானது. இவர்களுக்கு துபாயில் கன்ஸல்டன்சி உள்ளது.

அல்அய்ன் விமான நிலையத்திலிருந்து பறந்து உயர்ந்தபொழுது விமானிக்கு விமானத்தின் கட்டுப்பாடு கைநழுவியது. இதனைத் தொடர்ந்து விமானம் கீழே விழுந்து சில நிமிடங்களில் தீப்பிடித்துள்ளது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யுஏஇ:அல்-அய்னில் விமான விபத்த - நான்கு பேர் மரணம்"

கருத்துரையிடுக