8 மார்., 2011

ஹஜ் மானியங்களை நீக்கிவிட்டு வசதிகளை பெருக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

புதுடெல்லி,மார்ச்.8:ஹஜ் புனிதயாத்திரைக்கு மானியங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹாஜிகளுக்கு குறைந்த் பயணக் கட்டணம், விசாலமான வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடுச்செய்ய விமான நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜிற்கு செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவில் உயர்ந்த தங்குமிட வசதிகளை செய்வது, ஹாஜிகளுக்கு அளிக்கும் தற்காலிக பாஸ்போர்ட் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர்.

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் எம்.பிக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மானியங்கள் தேவையில்லை அதற்கு பதிலாக நீண்டகால கொள்கைதான் தேவை என முஸ்லிம் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹஜ் மானியங்களை நீக்கிவிட்டு வசதிகளை பெருக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை"

கருத்துரையிடுக