8 மார்., 2011

எகிப்து:போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதல்

கெய்ரோ,மார்ச்.8:எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகத்திற்கு முன்பு திரண்டிருந்த எதிர்ப்பாளர்கள் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஹுஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு நடைபெறும் முதல் சம்பவமாகும் இது.

போலீஸ் துறையில் சீர்திருத்தங்கோரி பேரணி நடத்திய எதிர்ப்பாளர்களை ராணுவம் கலைத்துவிட்டவுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டுகளை எறிந்த அந்த கும்பல் கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டிக் காயப்படுத்தியது.

ராணுவம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துச் செல்லும் வேளையில் 200 பேர் கொண்ட கும்பல் மக்களை தாக்கியதாக இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட முஹம்மது ஃபஹ்மி தெரிவிக்கிறார்.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எகிப்து உள்துறை அமைச்சகத்திற்கு முன்பாக திரண்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதல்"

கருத்துரையிடுக