8 மார்., 2011

பாலியல் கொடுமை:ஹிந்து மடாதிபதி குற்றவாளி - அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன்,மார்ச்.8:இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்காவில் வசிக்கும் பிரபல ஹிந்து மடாதிபதி ஸ்ரீ குருஜி என்றழைக்கப்படும் பிரகாஷானந்தா சரஸ்வதி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹுஸ்டனில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தில் வைத்து கடந்த 1990களின் மத்தியில் குருஜியின் பெண் பக்தர்களான சியாமா ரோஸ், வெஸ்லா டொனிஸன் காஸிமர் ஆகியோரை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரகாஷானந்தா சரஸ்வதி மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.

ஆசிரம வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் இருவரும் வசித்து வந்தனர். அமெரிக்காவில் ஏராளமான ஹிந்துக்கள் மரியாதை செலுத்தும் சுவாமிஜீயை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது ஹிந்து சமுதாயத்தினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், மேல் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் ஆசிரமத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் அக்ரவால் தெரிவித்துள்ளார்.

ஹூஸ்டன் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்கும். 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2008-ஆம் ஆண்டு குருஜீ என்ற பிரகாஷானந்தாவுக்கு எதிராக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைதுச் செய்யப்பட்ட பிரகாஷானந்தா 10 லட்சம் டாலர் கட்டி ஜாமீனில் வெளியேவந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 கருத்துகள்: on "பாலியல் கொடுமை:ஹிந்து மடாதிபதி குற்றவாளி - அமெரிக்க நீதிமன்றம்"

ABDUL AZIZ சொன்னது…

INDIALE 2G, 3G..,

AMERICALE GURUGIYA?...

பெயரில்லா சொன்னது…

பிரேம்குமார் ஆனந்தம் (?!!!)அடைய ஆனார், பிரேமானந்தா
ராஜசேகரன் ஆனந்தம் (?!!!)அடைய ஆனார், நித்யானந்தா
பிரகாஷ் ஆனந்தம் (?!!!)அடைய ஆனார், பிரகாஷானந்தா
இன்னும் எத்தனையோ பேர் இதுபோல் ஸ்ரீ ஸ்ரீ க்களாகவும் ஆனந்தாக்களாகவும், குருஜிக்களாகவும், சங்கராசாரிகளாகவும் ஆனந்தமடைந்து (?!!!) கொண்டு இருக்கின்றனர்.
தமிழ் நாட்டில் நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கிய இந்து முன்னணி காம கோபாலன் போல் பிரகாஷானந்தாவுக்காக குஜராத்தின் கேடி மோடி குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் இவர்களெல்லாம் பாசிசத்தின் பினாமிகலல்லவோ. நாய்கள் ஜாக்கிரதை என்பது போல் சாமியார்கள் ஜாக்கிரதை என்று போர்டு போடும் நிலைமை வந்தாலும் வரலாம்.
பத்தமடை நாமீ

பெயரில்லா சொன்னது…

saa mee pathi naa mee sonnathu righteee...

Genius

கருத்துரையிடுக