2 மார்., 2011

துனீசியாவில் இஸ்லாமியவாதிகள் புதிய கட்சியைத் துவக்க அனுமதி

துனீஸ்,மார்ச்.2:துனீஸியாவின் இஸ்லாமிய இயக்கமான அந்நஹ்தா புதிய அரசியல் கட்சியை துவக்குவதற்கான அனுமதியை அந்நாட்டின் இடைக்கால அரசு வழங்கியுள்ளது.

ஸைனுல் ஆபிதீன் பின் அலியின் அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்நஹ்தாவுக்கு தடை விதித்திருந்தது. கட்சியை உருவாக்கி அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என அந்நஹ்தா தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் பிரபல இஸ்லாமிய இயக்கமான இஃவானுல் முஸ்லிமீனிடமிருந்து பெற்ற உத்வேகத்தின் அடிப்படையில் ராஷித் அல் கன்னோஷியும் இன்னும் சில இஸ்லாமிய அறிவுஜீவிகளும் இணைந்து கடந்த 1981 ஆம் ஆண்டு அந்நஹ்தா இயக்கத்தை துவக்கினர்.

1989-ஆம் ஆண்டு இவ்வியக்கத்தின் தலைமையிலான கூட்டணி 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், பின்னர் அந்நஹ்தாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அந்நஹ்தாவின் 30 ஆயிரம் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துனீசியாவில் இஸ்லாமியவாதிகள் புதிய கட்சியைத் துவக்க அனுமதி"

கருத்துரையிடுக