டெஹ்ரான்,மார்ச்.2:ஈரானின் எதிர்க்கட்சித் தலைவர்களான மிர் ஹுஸைன் மூஸாவி மற்றும் மெஹ்தி கரூபி ஆகியோரை கைது செய்ததாக வெளியான செய்தியை ஈரானின் சட்ட அமைச்சக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
வீட்டுக்காவலிருக்கும் மூஸாவியையும், கரூபியையும் ரகசிய இடத்திற்கு கொண்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து சட்ட அமைச்சக செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுஸைன் முஹ்ஸனி தெரிவித்ததாவது: "இரண்டுபேரும் அவர்களுடைய வீடுகளிலேயே தங்கியுள்ளனர். சில சந்தேகங்கள் நிலவுவதால் இதர நபர்களுடன் தொடர்புக் கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகளை உருவாக்க நினைப்பவர்கள் மீது தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யவில்லை - ஈரான்"
கருத்துரையிடுக