2 மார்., 2011

யெமன்:மக்கள் எழுச்சியின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் - ஸாலிஹ்

ஸன்ஆ,மார்ச்.2:யெமன் மற்றும் அரபுலகத்தில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை உருவாக்கி ஸ்திரத் தன்மையற்ற சூழலை உருவாக்குவதற்கு பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்படுவதாக யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

அல்காயிதா போராளிகளை எதிர்கொள்வதற்காகவும், இதர உதவிகளுக்காகவும் அமெரிக்காவை எதிர்பார்த்திருக்கும் ஸாலிஹின் இவ்வறிக்கைக் குறித்து அரசியல் நோக்கர்கள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

‘இஸ்ரேலின் நோக்கம் அரபுலகம் அமைதியிழந்து காணப்பட வேண்டுமென்பதே. அமெரிக்கா இதற்கு உதவியளிக்கிறது. பாரக் ஒபாமா அமெரிக்காவிற்கு மட்டுமே அதிபராவார். அரபு உலகத்திற்கு அவர் அதிபர் அல்ல. அரபுலக பிரச்சனையில் தலையிடுவதை சர்வதேச சமூகம் கைவிடவேண்டும்’ என ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால்,ஸாலிஹின் அறிக்கைக்கு அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை. ஸன்ஆ பல்கலைக்கழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பேரணியை துவங்கிய உடனேயே ஸாலிஹின் அறிக்கை வெளியாகியுள்ளது.

எதிர்கட்சிகள் பங்கேற்ற போராட்டம் முதன்முதலாக ஸன்ஆவில் நடைபெறுகிறது. அல்காயிதாவுடன் தொடர்புடையவர் என அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் அப்துல் மாஜித் அல் சின்தானி போராட்டத்தில் கலந்துக்கொண்டோரிடையே உரை நிகழ்த்தினார்.

யெமனில் ஐக்கிய அரசை உருவாக்குவதுக் குறித்து ஸாலிஹ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதனை எதிர்ப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமன்:மக்கள் எழுச்சியின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் - ஸாலிஹ்"

கருத்துரையிடுக