2 மார்., 2011

மனித உரிமை மீறல்களில் இஸ்ரேல் முன்னணி - துருக்கி

அங்காரா,மார்ச்.2:உலகில் மனித உரிமை மீறல்களில் முதலிடம் வகிப்பது இஸ்ரேல் என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸன்போகா சர்வதேச விமானநிலையத்தில் வருகைத் தந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களுடன் சென்ற துருக்கி கப்பலை தாக்கி 9 பேரைக் கொலை செய்த நடவடிக்கை இஸ்ரேலின் கொடூரத்திற்கு நிரூபணமாகும்.

மனித உரிமையின் அனைத்து வரம்புகளையும் மீறி இஸ்ரேல் அத்தாக்குதலை நடத்தியது. இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதர நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என்பது எதிர்பார்க்க முடியாது என தாவுதோக்லு தெரிவித்தார்.

பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தும் குடியேற்ற நிர்மாணம் நிறுத்தவேண்டுமென ஐ.நாவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் செவிதாழ்த்தவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மனித உரிமை மீறல்களில் இஸ்ரேல் முன்னணி - துருக்கி"

கருத்துரையிடுக