1 மார்., 2011

டேவிஸிற்கு பதிலாக ஆஃபியா பாக். கோரிக்​கை - அமெரிக்​கா மறுப்பு

இஸ்லாமாபாத்,மார்ச்.1:அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றிய சி.ஐ.ஏ ஏஜண்டு ரேமண்ட் டேவிஸ் இரண்டு பாகிஸ்தான் நாட்டினரை அநியாயமாக சுட்டுக் கொன்றதால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். டேவிஸ் தூதரக அதிகாரிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளதால் அவரை விடுவிக்க அமெரிக்க கடும் பிரயத்தனம் செய்துவருகிறது. ஆனால், டேவிஸை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் புதிய வாக்குறுதியை பாகிஸ்தான் அமெரிக்க அதிகாரிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சிறைச்சாலையில் வைத்து எஃப்.பி.ஐ அதிகாரிகளை சுட்டுக்கொல்ல முயன்றார் என பொய் குற்றஞ்சாட்டப்பட்டு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்க சிறையிலடைக்கப்பட்டுள்ளார் ஆஃபியா. அவரை அமெரிக்கா விடுவித்தால் பாகிஸ்தான் டேவிஸை விடுவிக்கும் என்ற வாக்குறுதியை பாக்.அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

ஆனால், அமெரிக்கா உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர், பாகிஸ்தான் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளது ஆனால் நாங்கள் அதன் பின்னால் செல்லமாட்டோம் என தெரிவித்துள்ளார். இத்தகவலை ஏ.பி.சி நியூஸ் வெளியிட்டுள்ளது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டேவிஸிற்கு பதிலாக ஆஃபியா பாக். கோரிக்​கை - அமெரிக்​கா மறுப்பு"

கருத்துரையிடுக