2 மார்., 2011

திரிபோலியில் கடுமையான போராட்டம்

திரிபோலி,மார்ச்.2:எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் திரிபோலியில் சில பகுதிகளை மீட்பதற்காக கத்தாஃபியின் ராணுவம் முயற்சி மேற்கொண்டதால் அங்கு கடுமையான போராட்டம் நடந்துவருகிறது.

அஸ்ஸாவியாவில் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்களும், ராணுவமும் 6 மணிநேரம் மோதலில் ஈடுபட்டனர். கிழக்கு மற்றும் மேற்கு நகரங்களின் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அஜ்தாபியில் ஆயுதக்கிடங்கில் ராணுவத்தின் போர் விமானம் குண்டுவீசியதில் 6500 பேர் மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆன்மீகத்தின் அடிப்படையில் போராடும் தங்களுக்குத்தான் வெற்றிக் கிடைக்கும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ராணுவத்தின் சில யூனிட்டுகள் மக்களுடன் சேர்ந்துள்ளன.

இதற்கிடையே அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர் விமானங்களும், போர் கப்பல்களும் லிபியாவின் கடற்பகுதியை வந்தடைந்துள்ளன. கத்தாஃபிக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

கத்தாஃபி குடும்பத்தின் 300 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. லிபியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் தடையை ஏற்கனவே பிறப்பித்துள்ளன. லிபியாவுக்கு மேல் விமானம் பறப்பதற்கு தடை விதிக்கவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தும் லிபியா விமானங்களை சுட்டு வீழ்த்துவதும் பரிசீலனையில் உள்ளதாக காமரூன் தெரிவித்துள்ளார்.

கத்தாஃபி போர் பிரகடனப்படுத்தியுள்ளது சொந்த நாட்டு மக்களிடமாகும். அந்நாட்டில் மக்களை கொன்றொழிப்பதை அங்கீகரிக்க இயலாது என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஆனால், 'மக்கள் என்னை நேசிக்கின்றார்கள் எனவும், தனக்காக மரணிக்க அவர்கள் தயாராக உள்ளனர்' எனவும் கத்தாஃபி கூறியுள்ளார். 'நாடு என்னுடன் உள்ளது. நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே போராட்டம் நடைபெறுகிறது' என பி.பி.சி மற்றும் ஏ.பி.ஸி ஆகிய செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கை அல்ல, பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை காணவேண்டுமென வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார். சில லத்தீன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நான் இதனைக் குறித்து ஆலோசித்துள்ளேன். ஒரு கமிஷனை உருவாக்கி லிபியாவின் அரசு, எதிர்கட்சியினர்
ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அரபுலகின் அமைதிதான் நமக்கு முக்கியம். அமெரிக்காவின் நோட்டமெல்லாம் லிபியாவின் எண்ணெய் வளமாகும்.

ஈராக்,ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை உலகம் கண்டித்துள்ளது என சாவேஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "திரிபோலியில் கடுமையான போராட்டம்"

கருத்துரையிடுக