2 மார்., 2011

ராணுவ தளம்:லிபியாவை நோட்டமிடும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்

திரிபோலி,மார்ச்.2:ராணுவ தளம் நிறுவ அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளை லிபியாவுக்கு அனுப்பியுள்ளன.

லிபியாவின் கிழக்கு பகுதியில் ராணுவ தளம் அமைப்பதன் பின்னணியில் அந்நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது இந்நாடுகள் கண் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசி, தோப்ரூக் ஆகிய எண்ணெய் வளமிக்க நகரங்களில் அந்நிய சக்திகள் ராணுவ தளங்களை நிறுவ முயல்கிறார்கள் என லிபியாவின் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் சிறப்பு படையினர் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி துறைமுக நகரமான பெங்காசிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.

கப்பற்படை-விமானப்படை ராணுவத்தினரை லிபியாவுக்கு அனுப்பியுள்ளதை பென்டகனின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

லிபியாவில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளைக் குறித்தும் ஆலோசித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன்நேற்று முன்தினம் வாஷிங்டனில் தெரிவித்திருந்தார்.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பின்னணியில் மேற்கத்திய சக்திகள் லிபியாவில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹ்மான்பெரஸ்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்பொழுது லிபியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராணுவ தளம்:லிபியாவை நோட்டமிடும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்"

கருத்துரையிடுக