12 மார்., 2011

ஹவாய் மற்றும் இந்தோனேஷியாவிலும் சுனாமி: பீதியில் பசிபிக் நாடுகள்

ஹோனொலூலு,மார்ச்.12:ஜப்பானில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தைத் தொடர்ந்து பசிபிக் கடற்கரையோர பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பசிபிக் கடல் பிராந்தியத் தீவான ஹவாயில் பூகம்பத்தைத் தொடந்து உருவான சுனாமியில் பெரும் சேதம் விளைந்துள்ளது. இங்கு ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஹவாய் தீவிலுள்ள கவாயில் கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. உள்ளூர் நேரம் அதிகாலை மூன்றரை மணிக்கு இங்கு சுனாமி நாசத்தை விதைத்தது.

வடகிழக்கு இந்தோனேஷியாவில் சக்தி குறைந்த சுனாமி அலைகள் உருவான பொழுதும் பெரிய அளவிலான சேதங்கள் குறித்து தகவல் இல்லை. ஆனால், 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இரண்டரை லட்சம்பேர் கொல்லப்பட்ட கடலோரப் பிரதேசங்களில் சுனாமி பீதியைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர்.

ஜப்பானில் நேற்று உருவான பூகம்பத்தைத் தொடர்ந்து ஹவாய் தீவு மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்காவின் மேற்கு பிரதேசங்கள், மெக்சிக்கோ, மத்திய லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களில் கடல்மட்டம் 15 நிமிடங்கள் உயர வாய்ப்புள்ளதாக மைய இயக்குநர் சிப் மாக்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. தைவானில் 4 இன்ச் உயரத்திற்கு அலைகள் உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிய பசிபிக் பகுதிகளிலுள்ள வளரும் நாடுகளில் இந்த சேதங்களை சமாளிக்க முடியுமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து சில மணிநேரங்கள் கழித்து இந்தோனேஷியாவில் கடுமையான எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் கரேங்கேடாங் வெடித்து சிதறியது. மேல் பாகம் முற்றிலும் தகர்ந்த எரிமலையிலிருந்து லாவா மற்றும் புகையும் வெளியானது. அப்பிரதேசங்களிலிருந்து மக்களை வேறொரு இடத்திற்கு மாற்றத் துவங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆள்சேதம் குறித்த செய்திகள் இல்லை.

ஜப்பானில் பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான பூகம்பம் மற்றும் எரிமலை சீற்றம் ஆகியன மக்களை பீதி வயப்படுத்தியுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹவாய் மற்றும் இந்தோனேஷியாவிலும் சுனாமி: பீதியில் பசிபிக் நாடுகள்"

கருத்துரையிடுக