12 மார்., 2011

கராச்சியில் கலவரம்:ஐந்து பேர் பலி

இஸ்லாமாபாத்,மார்ச்.12:பாகிஸ்தானின் முக்கிய ஊழல் தடுப்பு தலைவரின் நியமனத்தை ரத்துச்செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கராச்சியில் நடந்த கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

அரசியல் கட்சிகள் பரஸ்பரம் மோதிக் கொண்டதில் இக்கலவரம் உருவானது. நகரத்தில் ஏராளமான கடைகளும்,வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஆளுங்கட்சியான பீப்பிள்ஸ் பார்டியும், நீதி பீடத்திற்குமிடையேயான மோதல் வலுவடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பைக் குறித்து கருத்துத் தெரிவிக்க பீப்பிள்ஸ் பார்டியின் தேசிய தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக சிந்து மாகாணத்தில் பீப்பிள்ஸ் பார்டி முழு அடைப்பை நடத்தியது. இதற்கிடையே வசீரிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர்
கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கராச்சியில் கலவரம்:ஐந்து பேர் பலி"

கருத்துரையிடுக