2 மார்., 2011

கத்தாஃபியை பழிக்க முடியவில்லை - சாவேஸ்

கராக்கஸ்,மார்ச்.2:லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபிக்கு கண்டனம் தெரிவிக்க தன்னால் இயலாது என வெனிசுலா நாட்டு அதிபரும் கத்தாஃபியின் நெருங்கிய நண்பருமான யூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.

லிபியாவை தாக்க திட்டமிடும் அமெரிக்காவைக் குறித்து உலகம் எச்சரிக்கையுடனிருக்க வேண்டுமென தொலைக்காட்சி உரையில் சாவேஸ் தெரிவித்துள்ளார்.

'கத்தாஃபியை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கான பிரச்சாரத்திற்கு பின்னணியில் அமெரிக்காவின் கரங்கள் உள்ளன. ஆதலால், அதன்பெயரால் கத்தாஃபியை விமர்சிக்க இயலவில்லை. லிபியாவுக்கு எதிராக அமெரிக்க பத்திரிகைகள் பொய்யான வார்த்தைகளை இட்டுக் கட்டுகின்றன.' இவ்வாறு சாவேஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தாஃபியை பழிக்க முடியவில்லை - சாவேஸ்"

கருத்துரையிடுக