2 மார்., 2011

லிபியா மக்கள் எழுச்சிக்கு சவூதி மார்க்க அறிஞர்கள் ஆதரவு

ஜித்தா,மார்ச்.2:லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக அந்நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கிய சில தினங்களில் சவூதி அரேபியாவைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் லிபியாவுக்கு வருகைத் தந்து கத்தாஃபிக்கு எல்லாவித ஆசீர்வாதங்களும் வழங்கியதாக அவரது ஸைஃபுல் இஸ்லாமின் அறிக்கையை மறுத்த மார்க்க அறிஞர்கள் லிபியா முழுவதும் நடைபெறும் போராட்டத்திற்கு தங்களது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள் சபையின் உறுப்பினரான ஷேக் ஸாலிஹ் அல் லெய்தான், தான் லிபிய மக்கள் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு லிபியாவுக்கு சென்றதாகவும், கத்தாஃபிக்கு புகழாரம் சூட்டுவதற்கல்ல எனவும் இன்னொரு மார்க்க அறிஞரான ஷேக் ஆதில் அல் கர்னி தெரிவித்துள்ளார்.

லிபியாவில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து ஷேக் ஸாலிஹ் அல் லெய்தான் தெரிவிக்கையில்,கத்தாஃபியின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி அல்ல. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸன்னூஸி மன்னரை கிளர்ச்சியின் மூலம் அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றிய கத்தாஃபி அதற்கு பின்னர் மக்களின் அங்கீகாரத்தை பெறவேயில்லை எனக்கூறினார். இச்செய்தியினை பிரபல உள்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நபிகளாரின் பொன்மொழிகளை நிராகரிக்கும் கத்தாஃபியை அங்கீகரிக்க முடியாது என்பது சவூதி மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். திருக்குர்ஆன் மட்டும் போதும் என கத்தாஃபி கூறியுள்ளார். மார்க்க அறிஞர்களின் ஏகமனதான தீர்மானத்தை(இஜ்மாஃ) கத்தாஃபி அங்கீகரிக்கவில்லை. உண்மையான முஸ்லிமோ அல்லது இமாமாகவோ(தலைவர்) இல்லாத அறிவுக்கெட்ட பதூவிய தலைவர்தான் கத்தாஃபி என மார்க்க அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா மக்கள் எழுச்சிக்கு சவூதி மார்க்க அறிஞர்கள் ஆதரவு"

கருத்துரையிடுக