4 மார்., 2011

துனீசியா: 'அல் நஹ்தா' இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீக்கம்

துனீஸ்,மார்ச்.4:துனீசியாவில் நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான அல்நஹ்தாவின் தடையை துனீசிய அரசு நீக்கியுள்ளது. அல் நஹ்தா செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துனீசியாவில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து 20 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்திருந்த அல் நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி நாடு திரும்பியிருந்தார்.

துனீசியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட பிரதான கோரிக்கைகளில் ஒன்று அல்நஹ்தாவின் தடையை நீக்குவதாகும்.

1989-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் மோசடிகள் நடந்த பிறகும் அல் நஹ்தா இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிப் பெற்றது. ஆனால், இதனை அங்கீகரிக்காமல் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் சர்வாதிகார அரசு அல்நஹ்தாவுக்கு தடை விதித்தது. அதன் ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "துனீசியா: 'அல் நஹ்தா' இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீக்கம்"

hameedfaizal சொன்னது…

எத்தனை நாள் அடக்கிவைத்தாலும் ,ஒருநாள் உண்மை வெளி உலகத்துக்கு தெரியவரும் அந்தநாள் முஸ்லிகளுக்கு இனிமையான நாள் .
அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அனைக்கமுடியாது ,ஒட்டுமொத்த உலகையும் இஸ்லாம் ஆளக்கூடிய நாள் வெகுதுளைவில் இல்லை. இம்மாம் ஹசனுல்பன்னா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் ஆரம்பித்த இந்த ஒழி இன்று ஒட்டு மொத்த உலகையும் ஆட்டி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருகிறது .

கருத்துரையிடுக