சவூதி நீதிமன்றம், தகுந்த ஆவணமின்றி அந்நாட்டில் இயங்கி வந்த லெபனான் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த ரோஸனா என்ற 22 வயது பெண் செய்தியாளருக்கு 60 கசையடிகள் வழங்கும்படி தீர்ப்பளித்துள்ளது.
Lebanese Broadcasting Corporation (LBC) எனப்படும் இந்த லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் "Bold Red Line" எனப்படும் நிகழ்ச்சியொன்றில் சவூதியைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரின் காம சல்லாப அனுபவங்களின் வெளிப்படையான பேட்டியை ஜூலை 15 ஒளிபரப்பியிருந்தது. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட சவூதி மக்களிடையே இது பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அப்துல் ஜவாத் என்பவருக்கு ஆயிரம் கசையடியும், ஐந்து வருட சிறைத் தண்டனையும் அளித்து சவூதி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தகுந்த ஆவணங்களின்றி அந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது தனக்கு தெரியாது என்றும், அப்துல் ஜவாத் பேட்டி ஒளிபரப்பில் தான் சம்பந்தப்படவில்லை என்றும், இந்த வழக்கிற்கும் அந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றும். இந்தத் தீர்ப்பிற்கு தான் கட்டுப்படுவதாகவும், மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்றும் ரோஸனா தெரிவித்துள்ளார்.
source:inneram
0 கருத்துகள்: on "சவூதி பெண் தொலைக்காட்சி செய்தியாளருக்கு 60 சவுக்கடி"
கருத்துரையிடுக