25 அக்., 2009

சூடான் விமான விபத்துக்கு பொருளாதார தடையே காரணம்


துபாய் – அமெரிக்காவால் சூடான் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார தடையை நீக்க வேண்டும். அதன் மூலமே தன்னுடைய வயதாகி கொண்டு செல்லும் விமானங்களுக்கான உதிரி பாகங்களை வாங்கி தன் விமானங்களை புதுப்பித்து கொள்ள முடியும் என்ற சூடான் நாட்டின் கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் சூடானியர்களும் எதிரொலிக்கின்றனர்.

புதன் கிழமை நடந்த விமான விபத்துக்கு தங்கள் நாட்டில் விமான உதிரி பாகங்களின் தட்டுபாட்டை பிரதான காரணமாக குறிப்பிடும் அவர்கள், ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் இவ்விஷயத்தில் தலையிட்டு பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக மற்றும் சூடான் நாட்டு விமான வல்லுநர்கள் குழு இவ்விபத்து குறித்து விசாரித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இது வரை 6 சூடான் விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.
அமெரிக்கா சூடானில் நடைபெறும் உள்நாட்டு போரை காரணம் காட்டி தன் நாட்டு நிறுவனங்கள் விமான உதிரி பாகங்களை விற்க கூடாது என்று தடை செய்திருக்கின்றது. 2003-ல் சூடான் ஏர்வேஸ் போயிங் 707 விபத்துக்குள்ளாகி 116 உயிர்கள் பலியான போதே இக்கோரிக்கை எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல் சாதிக் முஹம்மது அஹ்மத் எனும் சூடான் சுற்றுலா அதிகாரி இது சம்பந்தமாக மனித உரிமை அமைப்புகள் உட்பட சர்வதேச சமூகம் அமெரிக்க விமான நிலைய துறைக்கு அழுத்தம் கொடுத்து தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் உதிரி பாகங்கள் தட்டுபாடு காரணமாக இம்மாதிரி விமான விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றார்.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சூடான் விமான விபத்துக்கு பொருளாதார தடையே காரணம்"

கருத்துரையிடுக