23 நவ., 2009

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் 180 தினங்களுக்கு ஜாமீன் மறுக்கும் அதிகாரம் -சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி:கைதுச்செய்யப்பட்ட நபர் சார்ந்திருக்கும் இயக்கம் தடைச்செய்யப்படாவிட்டாலும் கூட அவருக்கு 180 தினங்களுக்கு ஜாமீன் மறுக்கும் அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுப்படுத்தியுள்ளது.

வழக்கமாக புலனாய்வு துறையினர் 90 தினங்களுக்குள் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்காவிட்டால் கைதுச்செய்யப்பட்டவருக்கு ஜாமீன் கிடைக்க உரிமை உண்டு. ஆனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம்( Unlawful Activities(Prevention) Act) படி180 தினங்களுக்கு ஜாமீன் மறுக்கலாம்.

அஸ்ஸாமில் திமஹலம் தேவ்க(Dima halam daogah(DHD)) என்ற இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தேசிய புலனாய்வு ஏஜன்சியால்(என்.ஐ.எ) கைதுச்செய்யப்பட்ட ஆர்.ஹெச்.கான் மற்றும் மொஹித் ஹோஜய் ஆகியோர் சமர்ப்பித்த சிறப்பு மனுவை தள்ளுபடிச்செய்து நீதிபதிகளான அல் தமாஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

2009 ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இருவரும் கைதுச்செய்யப்பட்டனர். பின்னர் தேசிய புலனாய்வு ஏஜன்சி இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது. அவ்வமைப்பையும் மத்திய அரசு தடைச்செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காம்ரூப் செசன்ஸ் நீதிமன்றத்தையும், குவஹாத்தி உயர்நீதிமன்றத்தையும் நாடியபொழுதும் பயனில்லாததால் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடினர்.
சுப்ரீம் கோர்ட்டில் இவர்கள் 90 தினங்களுக்காக தேசிய பாதுகாப்பு ஏஜன்ஸி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கவேண்டுமென்று கோரினர். ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் இதை எதிர்த்தார். பின்னர் நீதிபதிகள் மேற்கண்ட தீர்ப்பை கூறி மனுவை தள்ளுபடிச்செய்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் 180 தினங்களுக்கு ஜாமீன் மறுக்கும் அதிகாரம் -சுப்ரீம் கோர்ட்"

கருத்துரையிடுக