23 நவ., 2009

கோலான் குன்றுகளை விட்டுத்தராமல் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை – சிரியா

பாரிஸ்:சிரியாவிலிருந்து இஸ்ரேல் அபகரித்த பூமியை திரும்ப விட்டுத்தராமல் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று சிரியா அதிபர் பஸாருல் ஆஸாத் கூறினார்.

இஸ்ரேல்-சிரியா பேச்சுவார்த்தைத் தொடர்பாக பாரிஸில் பிரஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்பொழுதுதான் பஸார் இக்கருத்தை வெளியிட்டார்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு சிரியாவுடன் தயார் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெளிவுப்படுத்தியதாக சர்க்கோசி பஸாரிடம் தெரிவித்தார். நெதன்யாகுவின் சுற்றுப்பயணம் பிரான்சில் முடிந்து 2 தினங்களுக்கு பிறகுதான் பஸாருல் ஆஸாத் பிரான்சு சென்றிருக்கிறார். நேரிடையாக சந்தித்து பேசுவது என்ற இஸ்ரேலின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாத பஸார் துருக்கியை நடுவராகக்கொண்ட நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தை என்ற கருத்தைக்கொண்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோலான் குன்றுகளை விட்டுத்தராமல் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை – சிரியா"

கருத்துரையிடுக